Spotlightசினிமா

அதீத எதிர்பார்ப்பில் கோடை விடுமுறையை மிரட்ட வருகிறது ‘லிசா’..!!

அஞ்சலி, யோகி பாபு, சான் ஜோன்ஸ் நடிப்பில் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘லிசா’.

3டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது..

யோகி பாபுவின் காமெடி, மிரட்டலான ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த வாரம் வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்பில் ‘லிசா’ தான் இருக்கிறது என்பதில் மாற்றுகருத்தில்லை.

பி ஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி ஜி முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தினை வெளியிடுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button