
3 மாத காலமாக மிகவும் விறுவிறுப்பாக தனியார் தொலைக்காட்சியில் நடந்தேறியது “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி. அனைவரும் எதிர்பார்த்தப்படி ராஜு முதலிடத்தை பிடித்து பிக்பாஸ் டைட்டிலைத் தட்டிச் சென்றார்.
இவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாம் இடத்தையும், பாவனி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் பல முறை பாவ்னியை மட்டும் தனக்கு பிடிக்காது என்று ஓபனாகவே கூறியிருக்கிறார் ராஜு.
அதே பகைமை இன்னமும் தொடர்கிறது என்று கூறியுள்ளார் ராஜு. சில தினங்களுக்கு முன் ராஜு ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது, பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு பிடிக்காத நபர் யார் என்று ரசிகர்கள் ஒருவர் கேட்டதற்கு, அது பாவனி தான் என்று யோசிக்காமல் சட்டென பதிலளித்தார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தால் அனைவரும் நட்பாக மட்டுமே பழகுவர். ஆனால், ராஜு இன்னமும் அதே பகைமையை மனதில் வைத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அபினய் இடையே காதல் ஏற்பட்டபோது, ராஜு தெரிவித்த கருத்துக்கள் பாவ்னியை கோபமடைய செய்தன. இதனால், இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதை மனதில் வைத்துதான் பாவ்னி மீது தற்போது வரை ராஜு கோபத்தை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பாவ்னியை பிடிக்காது, அவரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ராஜு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல முறை கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




