Spotlightசினிமா

என்ன கங்கனா மேடம் இப்படி ஆயிடுச்சே..? ரசிகர்களால் தூக்கியெறியப்பட்ட “தாக்கட்”; பல கோடி இழப்பு!

பிரபல நடிகையான கங்கனா ரனாவத், பாலிவுட்டில் மிகப்பெரும் ஒரு நட்சத்திரம். அவ்வப்போது, ஆளும் மத்திய அரசான பாஜக-பற்றி ஆதரவாக சில கருத்துகளை கூறி ட்வீட் செய்வார். இது சிலருக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும், பலருக்கு வெறுப்பைத் தான் கொடுத்து வந்தது.

சில வருடங்களாக நாயகியை மையப்படுத்தி உருவாகும் கதைகளில் மட்டுமே நடித்து வரும் கங்கனா, தன்னை சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொண்டு உலா வந்தார்.

இதனால், இவரை வைத்து சுமார் 100 கோடி பட்ஜெட்டில் ‘தாக்கட்’ என்ற படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தை ரேனிஷ் காய் இயக்கியுள்ளார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியானது. வெளியாகி 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை ரூ. 3.5 கோடி வரை மட்டுமே வசூலாகியுள்ளது. அதிலும் திரைப்படம் வெளியான 8-வது நாளில் இந்தியா முழுவதும் மொத்தம் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு வருகிறது. இது கங்கனா ரனாவத்-திற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button