Spotlightவிமர்சனங்கள்

பார்டர் – விமர்சனம் 3/5

ருண் விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது “பார்டர்”. இப்படத்திற்கு முன்பே டோனி நடிப்பில் தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டிற்கு தயாராக இருந்த படம் தான் இந்த  “பார்டர்”.

டைட்டில் பஞ்சாயத்தை முடித்து தற்போது இப்படம் திரை வெளியீடாக இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர், அத்திப்பள்ளி இடையில் பார்டரில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது இப்படம்.

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இப்படம் வெளியாகியுள்ளது, ரசிகர்களை திருப்திபடுத்தியிருந்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலமாக காணலாம்.

கதைப்படி,

ஒரு மனிதனின் தலையை கர்நாடகவிலும், முண்டத்தை தமிழகத்திலும் போட்டுச் செல்கிறது ஒரு டீம்.

தமிழக போலீஸாரை திணற வைப்பதற்கும் அவர்களை திசை திருப்புவதற்காகவும் அந்த கேங்க்ஸ்டர் டீம் இச்செயலில் ஈடுபடுகிறது.

இறுதியாக அந்த வழக்கு என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதையாக வந்திருக்கிறது.

காவிரி பிரச்சனை எப்போதெல்லாம் எழுப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த மாதிரியான ஒரு பிரச்சனைகளை எழுப்பி காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறது ஒரு கும்பல் என்று இப்படம் விவரிக்கிறது.

ஒரு சில கூலிப்படைகளின் கோர முகத்தை இப்படம் தோலுரித்து காட்டியிருக்கிறது.

படத்தினை திரில்லர் கலந்த கலவையாக கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்கள் வெங்கடேஷ் மற்றும் மல்லு அர்ஜுன்.

காட்சிக்கு காட்சி மிரள வைத்திருப்பது படத்திற்கு பலம். ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படாமல் படுவேகமாக கதையை நகர்த்தி சென்றிருப்பது கூடுதல் பலம்.

கதையின் நாயகனாக நடித்துள்ள டோனி, மிகவும் யதார்த்தமாகவும் அனுபவ நடிகரை போல ஒரு நடிப்பையும் கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோ கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து முத்திரை பதிக்க டோனிக்கு வாழ்த்துகள். ஏற்கனவே ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நாயகனாக “டோனி”க்கு இப்படம் ஒரு மகுடம் சூட்டும் படமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நாயகியாக தரணி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறார். ரஞ்சிதா, சாய்தினா, பில்லி முரளி, கன்னட நடிகர் அவினாஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு காட்சியையும் நம் கண்களுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் செல்வகுமார் சங்கரலிங்கம் அவர்களுக்கு பெரும் வாழ்த்துகள்.

கதையோடு பயணம் புரிய வைத்திருக்கிறது அலென் விஜய்யின் பின்னனி இசை.

எடிட்டிங்கில் அதுல் விஜய் ”ஷார்ப்”

இத்திரைப்படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஷ் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்திருக்கிறார்.

பார்டர் – முக்கியமான தருணத்தில் திரும்பி பார்க்க வைத்த படம்

Facebook Comments

Related Articles

Back to top button