
நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகியிருந்த படம் ”புதுப்பேட்டை”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ஒரு சாதாரண இளைஞன் எப்படி ரவுடியாகி அதிலிருந்து மிக பெரும் அரசியல் புள்ளியாக மாறுகிறான் என்பது தான் கதை. இந்த படத்தை பார்த்து தற்சமயம் அனைவரும் பாராட்டினாலும் ரவுடியின் வாழ்க்கையை அற்புதமாகவும் சரியாகவும் காட்டப்பட்ட படம் என்று எல்லாவரும் புகழ்ந்தாலும் வெளியான அந்த நேரத்தில் தோல்வியடைந்த படம்தான் அது .
இந்த படத்திற்கு தற்போது இருக்கும் அதிகமான கவனத்தை தொடர்ந்து புதுப்பேட்டை படத்தை மீண்டும் சென்னையின் பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்கம் திரையிட்டுள்ளது . அந்த படத்தை பார்த்துவிட்டு முடிவில் படத்திற்கு கிளம்பும் கரகோஷத்தை காணுங்கள்.
https://twitter.com/premjvCR7/status/1102123379933339649





