
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நட்சத்திரம் தல ‘அஜித்’. அவர் செய்யும் உதவிகள் பலர் கூறினால் மட்டுமே வெளியே வரும். ஒரு கை கொடுத்தால் மறு கைக்கு தெரியக் கூடாது என்னும் கோட்டில் வாழ்ந்து வருபவர்.
தற்சமயம் அவர் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். பெண்களுக்கு எதிராக சில கொடுமைகள் நடந்துவரும் நிலையில், பெண்களை மையப்படுத்திய ஒரு படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
அந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்திற்கு ஒரு நீதிமன்ற காட்சி உள்ளதாம், அது பெரிதாக பேசப்படும் என்று சொல்கின்றனர். இந்த சமயத்தில் வாடகை கார் ஒன்றில் அஜித் பயணம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் பெற்று வருகிறது.
Facebook Comments




