Spotlightசினிமா

பேட்ட இயக்குனரை பெருமிதத்துடன் பாராட்டிய நடிகர் தனுஷ்

தனுஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்த கொடி படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார்.

இவர் மீண்டும் தனுஷ் உடன் இணைந்துள்ள பட்டாஸ் படம் ஜனவரி 16ல் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தனது 40வது படத்தையும் அண்மையில் முடித்துள்ளார் தனுஷ்.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படப்பிடிப்பில் தன் அனுபவம் குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது…
நான் வேகமாக நடித்து முடித்த படங்களில் ஒன்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜீன் படம். அவர் ஒரு விவேகமான இயக்குநர்.

அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார்.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்து கூறியதாவது… உங்களுடைய வார்த்தைகளுக்கு மிக்க நன்றி தனுஷ். உங்களைப் போல ஒரு சிறந்த நடிகருடன் பணியாற்றியது, எனக்கும் என் குழுவுக்கும் நல்ல அனுபவம்” என பதிலளித்துள்ளார்.

Dhanush and Karthiku Subbaraj talks about D40 movie

Facebook Comments

Related Articles

Back to top button