
தமிழகத்தில் சில காலமாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அரசியல்வாதிகள் ஆரம்பித்து தொழிலதிபர்கள் சினிமாத்துறையினர் என பலரையும் அமலாக்கத்துறையினர் தங்களது விசாரணை வளையத்தில் வர வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் சோதனை நடைபெற்ற சமயத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனையானது நடைபெற்றது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கனிமவளம் சார்ந்த துறையில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய பிரமுகர்கள் இந்த வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வளையத்திற்குள் பிரபல துபாய் தயாரிப்பாளர் ஒருவரும் சிக்கியிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில், தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் இயக்குனரின் மகன் நடித்த ஒரு படத்தினை இந்த துபாய் தயாரிப்பாளர் தயாரித்துள்ளார்.
மேலும், தமிழ் சினிமாவின் பல பிரபலங்களை துபாய் வரவழைத்து அங்கு அவர்களுக்கு ராஜமரியாதையோடு வரவேற்பளித்து, பிரமாண்டமான ஹோட்டல் ஒன்றையும் திறந்திருக்கிறார் இந்த தயாரிப்பாளர்.
தமிழகத்தின் ஆளுங்கட்சி துணையோடு துபாயில் நடமாடி வருகிறாராம் இந்த தயாரிப்பாளர்.
இவர், தொடர்ச்சியாக சிம்பு நடிப்பில் ஒரு படம், சுந்தர் சி இயக்கத்தில் அடுத்த படம் என அடுத்தடுத்து படங்களை தயாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறையின் பார்வை இவர் மேல் விழுந்திருக்கிறது.
விரைவில் இவர் மீது விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக விரைவில் அமலாக்கத்துறை துபாய் செல்ல தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





