Spotlightதமிழ்நாடு

தேவையில்லாம வெளியே வராதீங்க…. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை!

மிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், தமிழக அரசு தொடர்ந்து முன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றுக்கென்று ப்ரத்யேகமாக மாற்றப்பட்ட ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ’ தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது; கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம்.

144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதிகாப்பதற்கே; 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்

கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 லேப் டெக்னீசியன்ஸ் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button