
விஜய் நடிக்கும் 63 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். அட்லீ இயக்கி வரும் இப்படத்தினை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையிலேயே நடைபெற்றது. இது பற்றி படக்குழுவினர் ஒருவர் கூறும்போது
”இந்த படத்திற்கு வெறித்தனம் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இணையதளங்களில் பொய் தகவல் பரவி வருகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் பாடல்கள் வெளியீடும் நேரத்தில் பெயர் சூட்டப்படவிருக்கிறது.
படத்தின் முக்கிய வில்லனாக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார். படப்பிடிப்பு பெரும்பகுதி பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றது. இதற்கு விஜய் தான் காரணம்.
நம்ம ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும் என்று அவர் சொன்னதால் தான் சென்னையிலேயே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.” என்று கூறினார்.