முகமது ஆசிப் ஹமீத் இயக்கத்தில் நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், ஸ்வயம் சிதா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜை, சேகர், யாமினி, தரணி, பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபிர் அலி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “தி அகாலி”.
கிரி முர்ஃபி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்திருக்கிறார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்திருக்கிற்
தயாரிப்பாளர்-யுகேஷ்வரன்
கதைக்குள் பயணிக்கலாம்…
சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு வழக்கை விசாரிக்க, அவ்வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஜெயக்குமாரை விசாரிக்க வருகிறார் ஸ்வயம் சிதா.
கதையை ப்ளாஷ் பேக்காக சொல்கிறார் ஜெயக்குமார். நரபலி கொடுக்கப்பட்டு 7 பேர் கொலை செய்யப்படுகிறது. அந்த கொலையை தான் ஜெயக்குமார் & டீம் விசாரித்திருக்கிறது.
இந்த நரபலியை ஒரு பெண் தான் கொடுத்தார் என்றும், அடுத்ததாக ஒரு பெண்ணை நரபலி செய்வதற்கு திட்டமிட்டிருப்பதும் தெரிய வருகிறது.
மேலும், ஜெயக்குமாருடன் இருந்த காவலரும் அமானுஷ்யத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் போது நாசரும் இந்த வட்டத்திற்குள் வருகிறார்.
அகாலி என்பது என்ன.? அமானுஷ்யம் என்பது உண்மை தானா.?? இந்த நரபலியை யார் கொடுத்தது என்ன நோக்கம் என்பது தான்.??? நாசர் கதையில் என்ன செய்கிறார்.?? என்பதற்கெல்லாம் விடையை இரண்டாம் பாதியில் கொடுத்திருக்கின்றனர்…
வித்தியாசமான முயற்சி தான், ஆனாலும் எளிய மக்களும் எளிய ரசிகனும் எளிதில் புரியும் விதமாக திரைக்கதையை அமைத்து படத்தை நகர்த்தியிருந்திருக்கலாம்.
நடிகர்கள் தங்களுக்கானதை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் காட்சிகளை குறைத்து வசனங்களாக படத்தை நகர்த்தியிருப்பது பெரும் சலிப்பை ஏற்படுத்திவிட்டது.
ஜெயக்குமார் பேசிக் கொண்டே இருக்கிறார்… நாசர் ஒரு நீண்ட கதையை ப்ளாஷ் பேக்காக சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதுக்கெல்லாம் ஒரு எண்டே இல்லையா என்று கூற வைத்துவிட்டார் இயக்குனர்… ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கொஞ்சம் ஆறுதல் அவ்வளவே…