Spotlightசினிமாவிமர்சனங்கள்

தீராக் காதல் – விமர்சனம் 3/5

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி, அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் தீராக் காதல்.

ரோகின் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கதை மற்றும் திரைக்கதையை ரோகின் வெங்கடேசன் மற்றும் சுதேர்ந்தர்நாத் கவனித்துள்ளனர்.

கதைப்படி,

மனைவி ஷிவதா மகள் வ்ரித்தியுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜெய். பணி நிமித்தமாக இரயிலில் மங்களூர் செல்லும் வழியில் தனது கல்லூரி காதலியான ஐஸ்வர்யா ராஜேஷை பார்க்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் அம்ஜத் கான். எதற்கெடுத்தாலும் தனது மனைவியை அடிப்பதும் திட்டுவதும் தான் வேலையாக வைத்திருக்கிறார் அம்ஜத் கான்.

தானும் மங்களுக்கு ஆபீஸ் பணிக்காக செல்வதாக கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மங்களூரில் தினமும் சந்திப்பதும் பேசுவதுமாக சில நாட்கள் இருக்கின்றனர்..

இருவரும் சென்னை திரும்பும் முன், இனி இருவரும் சந்திக்க வேண்டாம். அப்படி சந்தித்தால் இருவரின் குடும்பத்திற்குள்ளும் பிரச்சனை வரும் என்று கூறி அங்கு பிரிகிறார்கள்.

சென்னைக்கு வரும் ஜெய், தனது மனைவி மகளோடு சந்தோஷமாக வாழ்கிறார்., அதே சமயத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் அடித்து துன்புறுத்துகிறார் அம்ஜத். இதனால், அந்த வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இனி அம்ஜத்தோடு வாழ முடியாது என்று கூறி விவாகரத்திற்கு அப்ளை செய்கிறார்.

மீண்டும் ஜெய் தனது வாழ்க்கைக்கு வேண்டும் என்ற முடிவை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக பொருந்தியிருக்கிறார் ஜெய். அப்பாவியான முகம், மாட்டிக் கொண்டும் முழிப்பது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் தவிப்பு, காதல், பாசம் என பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

எக்ஸ் காதலியாக, தனது காதலை மீண்டும் புதுப்பிக்கும் தருணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் க்யூட். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குடும்பத்தை பார்க்காமல் தனக்காக யோசித்து முடிவெடுக்கிறாரே என்று வில்லியாக நகரும் இடத்தில் தனக்கான வலியை கூற வைத்து ஸ்கோர் அடித்து கதையை மெதுவாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன்.

கணவனை பிரிந்து வந்த பிறகு, ஐஸ்வர்யா ராஜேசை சந்தித்து பேச வரும் இடத்தில் அம்ஜத்தின் கண்ணத்தில் பளார் விடும் காட்சியில் திரையரங்கு கைதட்டியது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெய்யின் வீட்டிற்குள் ஒளிந்திருக்கும் காட்சி, பார்ப்பவர்களின் மனதுக்குள் திக் திக் தான்.

கண்களால் பேசும் ஷிவதா படத்திற்கு பலம். நண்பனாக நடித்த அப்துல் வரும் இடங்களில் எல்லாம் டைமிங்க் காமெடியில் கலகலப்பூட்டுகிறார்.

திருமணத்திற்கு பிறகு முன்னாள் காதலர்கள் சந்தித்தால் அவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக கூறிய இயக்குனர் ரோஹின் வெங்கடேசனுக்கு வாழ்த்துகள்.

ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். ரயில்வே ஸ்டேஷன் காட்சியில் உருக வைத்துவிட்டார் ரவிவர்மன்.

சித்துகுமாரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். பின்னணி இசையில் காதல் நெருடலை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் இன்னும் சற்று நெருட வைத்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.

பல படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும், ஒரு அழகான வாழ்க்கை பயணத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இதுதான் க்ளைமாக்ஸாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த ஒரு க்ளைமாக்ஸை கொடுத்தது சற்று சறுக்கல் தான் என்றாலும்,

தீராக் காதல் – காதல் யாருக்கு தான் பிடிக்காது..

Facebook Comments

Related Articles

Back to top button