Spotlightசினிமா

‘பரியேறும் பெருமாள்’ கருப்பி தான் படத்தோட ஹீரோ!

ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர சாதி மதத்தோடு பார்க்க கூடாது. சாதி ஒரு மனிதனின் அடையாளமே தவிர ஒரு மனிதனின் வாழ்க்கையோ கௌரவமோ கிடையாது . சாதி ஒரு மனநோய் என்பதை உணர்த்தி ஆணவப் படுகொலைகளை ஒழிக்கும் கதைக்கு அழகாக திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குநர் ஜீன்ஸ்காந்த் .

ஒரு கல்லூரி மாணவனின் காதல் வாழ்க்கையை இளமைத் துள்ளலோடு பார்த்து ரசிக்கலாம். தேவாவின் உதவியாளர் விஜய்மந்தாரா நான்கு பாடல்களுக்கு இசையமைக்கிறார். ‘நான் கடவுள் ‘படத்தில் பிச்சைப் பாத்திரம் பாடலை பாடிய மது பாலகிருஷ்ணா ‘ஊருசனம் பொல்லாதது ஆத்தா’ என்கிற பாடலைப் பாடுகிறார். பிரியனின் உதவியாளரும் த்ரிஷா நடித்த ‘கர்ஜனை’ படத்தின் ஒளிப்பதிவாளருமான சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார்.

மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் உதவியாளர் மின்னல் முருகானந்தம் இரண்டு சண்டைக்காட்சிகளை அமைத்து ஸ்டண்ட்டைக் கவனிக்கிறார்.பொதிகை டிவி தலைமை எடிட்டரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான லட்சுமணன் படத்தொகுப்பு செய்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கிறது. சத்யராஜ் ,சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. படத்தில் இரண்டு காதநாயாகி இஸ்மத் பானு, சுரேஸ்லேகா, நடிக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சி அரசியல் பிரமுகர் மயிலை கணேசன், சண்டைப் பயிற்சியாளர் அயூப்கான் ,அப்துல் ரஹீம், மணிவாசகன் மாரிக்கனி ஈஸ்வரன் வில்லனாக நடிக்கிறார்கள்.

ஜெயசிம்மன் ,மீரான் முகமது ,கிளாடிஸ் எழில் ஹீரோவின் நண்பர்களாக நடிக்கிறார்கள். சிவகாசி செல்லத்துரை, கன்னிசேரி பாண்டியன், விருதுநகர் பால்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் .

தேனி, வீரபாண்டி ,கம்பம், கோம்பை ,மேகமலை போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறும்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜீன்ஸ்காந்த் .

ஜீன்ஸ் ஸ்டுடியோ மிக பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button