அறிமுக இயக்குனர் ரஜீஸ் பாலா இயக்கத்தில் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ளது வண்டி. இப்படத்தினை ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் ஜி வி பிரகாஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.
ஜி வி பிரகாஷ் பேசும்போது, ‘இயக்குனர் ரஜீஸ் பாலாவிற்கும் விதார்த் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இப்படம் மிகப்பெரிய வெற்றியடையவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று கூறினார்.
விதார்த் பேசும்போது, ‘ இப்படத்தில் முதலில் நடிக்க வேண்டாம் என்று தான் நினைத்தேன். பின், கதையில் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நடித்தேன். ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் காற்றின் மொழி படத்தில் சில நாட்களிலே எனது படப்பிடிப்பினை முடித்தேன்.
அதற்கு காரணம் வண்டி படத்தில் நான் நடிப்பை கற்றுக் கொண்டது. இயக்குனரின் திறமையான வேலையால் நான் எனது நடிப்புத் திறனை மேலும் வளர்த்துக் கொண்டேன்.
மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் ஓகே கூறினால் அவரது இயக்கத்திலும் நடிக்க நான் தயாராக உள்ளேன். அடல்ட் படத்திலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.’ என்றும் விதார்த் கூறினார்.