Spotlightசினிமாவிமர்சனங்கள்

கட்சிக்காரன் – விமர்சனம்

றிமுக இயக்குனர் ஐயப்பன் இயக்கத்தில் விஜித் சரவணன் ,ஸ்வேதா டாரதி,அப்புக்குட்டி , சிவ சேனாதிபதி ,ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கட்சிக்காரன்.

கதைப்படி,

ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து வருகிறார்கள் விஜித் சரவணனும் அவரது தந்தையும்.

ஒருகட்டத்தில், தனது தந்தையை இழந்து தனி மரமாக நிற்கும் விஜித் சரவணன். நாயகி ஸ்வேதா டாரதியை திருமணம் செய்து கொள்கிறார். மீண்டும் அதே கட்சியில் தனது விசுவாசத்தை காட்டி, தனது உழைப்பை அந்த கட்சிக்காக கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் மூலம் விஜித் சரவணனுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், கோபம் கொண்ட விஜித் சரவணன் தான் இத்தனை வருடம் இக்கட்சிக்காக உழைத்திருப்பதாகவும், அதனால் பணத்தை அதிகமாக இழந்திருப்பதாகவும் கூறி அக்கட்சி தலைவரிடம் மொத்த பணத்தையும் திருப்பித் தருமாறு கூறுகிறார் விஜித் சரவணன்.

கட்சித் தலைவர் கொடுக்க மறுக்க… இனி என் பாதை சிங்கப்பாதை என விஜித் சரவணன் அடுத்தகட்டமாக தனது ஆட்டத்தை ஆடுகிறார். இறுதியில் இந்த ஆட்டத்தில் வென்று காட்டினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக விஜித் சரவணன் படுவேகமான எனர்ஜியோடு நடித்து கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். இருந்தாலும், இன்னும் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் விஜித் அவர்களே..

நாயகி ஸ்வேதா டாரதி. பார்ப்பதற்கு அழகாகவும், காட்சிகளில் தேவதையாகவும் காட்சியளித்திருக்கிறார் ஸ்வேதா. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமான அழகூட்டல் அதிகமாகவே தெரிகிறது.

மற்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கொடுத்ததையும் சொன்னதையும் செய்து நடித்திருக்கிறார்கள்.

மிக அழகான கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை கொண்டு சென்ற இடத்திலும், நட்சத்திரங்களின் தேர்வுகளிலும் சற்று சறுக்கியிருக்கிறார். படத்தின் பொருளாதார நிலை கூட அதற்கு காரணமாக இருக்கலாம். இருந்தாலும், சவுக்கடியான கதையை தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குனருக்கு பெரும் பாராட்டுகள்.

மதன் குமார் அவர்களின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக கைகொடுத்திருக்கிறது. ரோஷன் ஜோசப்,சி.எம். மகேந்திரா இருவரின் இசையில் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது.

சில அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை பல இடங்களில் காட்டி தைரியமாக வசனங்களில் வாள் வீசிய இயக்குனர் ஐயப்பனுக்கு சல்யூட்.

பெரும் நடிகர்கள் இக்கதையில் நடித்திருந்தால், இப்படம் விவாதப் பொருளாக நிச்சயம் மாறியிருக்கும்.

கட்சிக்காரன் – துணிச்சலுக்கு சொந்தக்காரன் (இயக்குனர்)

Facebook Comments

Related Articles

Back to top button