Spotlightவிமர்சனங்கள்

ஜீப்ரா – விமர்சனம் 3.25/5

யக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்ய தேவ், டாலி தனஞ்செயா, ப்ரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ஜீப்ரா.

தெலுங்கு முதன்மை மொழியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், மொத்தமாக ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டிருகிறது. உலகம் முழுவதும் இன்று இப்படம் வெளியாகியிருக்கிறது.

கே ஜி எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். எஸ் என் ரெட்டி, எஸ் பத்மஜா, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் இவர்கள் அனைவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பென்குயின் படத்தினை இயக்கியிருந்தவர் தான் இந்த ஈஸ்வர் கார்த்திக்.

மிகப்பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜீப்ரா படத்தின் விமர்சனத்தை பார்த்து விடலாம்.

கதைக்குள் பயணிக்கலாம்…

நாயகன் சத்ய தேவ் மற்றும் நாயகி ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலர்கள். இருவரும் தனித்தனி வங்கியில் பணி புரிந்து வருகின்றனர். நாயகி ப்ரியா பவானி சங்கர் ஒருமுறை செக் ஒன்றின் தவறான அக்கெளண்டிற்கு பணத்தை மாற்றி விடுகிறார். அந்த அக்கெளண்டில் பணம் ஏறியது, அதை எடுத்துக் கொண்டு பணத்தை தர முடியாது என்று கூறி விடுகிறார்.

இச்சமயத்தில், சத்ய தேவ் ஒரு ப்ளே ஒன்று செய்கிறார். அந்த ப்ளேவால் இழந்த பணத்தை மீட்டு விடுகிறார். அந்த ப்ளே செய்த வினையால் மற்றொரு நாயகன் டாலி தனஞ்செயா சத்யதேவின் வாழ்க்கையில் எண்ட்ரீ ஆகிறார்.

சத்ய தேவ் செய்த ப்ளேயால், டாலி தனஞ்செயாவிற்கு 5 கோடி ரூபாய் வரை நட்டம் வர, அதை நான்கு நாட்களுக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

டாலி தனஞ்செயா மிகப்பெரும் கேங்க்ஸ்டராக வருகிறார். இதனால், நான்கு நாட்களில் ஐந்து கோடியை தயார் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் சத்ய தேவ்.

இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சத்ய தேவ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது கேரக்டரை உள்வாங்கி கனக்கச்சிதமாக பொருத்தி நடித்திருக்கிறார். அவர் ஆடும் ப்ளேவில் நம்மையும் சேர்ந்து பயணிக்கும்படியாக வைத்து விடுகிறார் சத்ய தேவ். ப்ரியா பவானி சங்கருடனான காதல் காட்சிகளில் மிளிர்கிறார்.

ப்ரியா பவானி சங்கரும் காட்சிகளில் அழகாக வந்து செல்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாகவும் செய்து முடித்திருக்கிறார்.

இரண்டாம் நாயகனாக நடித்து மாஸ் காட்டியிருக்கிறார் நடிகர் டாலி தனஞ்செயா. எண்ட்ரீ ஆகும் காட்சிகளிலெல்லாம் தெலுங்கில் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் வெறி கொண்டு நடித்து நம்மை மிரள வைத்திருக்கிறார்.

பெரிதான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் சத்யராஜ் தனது காட்சிகளை பூர்த்தி செய்திருக்கிறார்.

ஆங்காங்கே எட்டிப் பார்த்த காமெடி காட்சிகள் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் ஓகே தான் என்றாலும், தனக்கே உரித்தான பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருப்பதால், கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வண்ணம் திரைக்கதையை படுவேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக். லக்கி பாஸ்கர் போன்ற கதையை கையில் எடுத்தாலும், அதில் இருந்து இது அதிகமாகவே மாறுபட்டு நிற்கிறது.

பரபரவென்று செல்லும் கதையில், கடைசி 30 நிமிடங்கள் சீட்டின் நுனியில் அமர வைத்து விடுகிறார் இயக்குனர். இன்னும் சற்று தெளிவாக கதையை நகர்த்தியிருந்திருக்கலாமோ என்ற எண்ணம் சற்று எழ வைத்திருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி,

ஜீப்ரா – மிரட்டல்

Facebook Comments

Related Articles

Back to top button