Spotlightசினிமா

இதுதான் மக்களின் வெற்றி.. ஆயிரக்கணக்கான மக்களுக்கு ப்ரத்யேகமாக திரையிடப்பட்ட “ஜெய்பீம்”!!

மிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’.

ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதற்கான சாட்சி ‘ஜெய் பீம்’.

இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.

நவம்பர் 2 ஆம் தேதி வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ப்ரத்யேகமாக “ஜெய்பீம்” காட்சி திறந்தவெளியில் திரையிடப்பட்டிருக்கிறது.

படத்தின் இறுதியில் மக்கள் பலரின் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர் துளிகள் இப்படத்திற்கான வெற்றியை மேலும் வலுசேர்க்கும் விதமாக இருந்தது. ஒரு படத்தை எந்த நோக்கத்திற்காக யாருக்காக எடுக்கப்பட்டமோ அவர்களை சென்றடைய வைத்ததில் தயாரிப்பாளர் சூர்யாவிற்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.

Facebook Comments

Related Articles

Back to top button