
இயக்கம் : பெருமாள் வரதன்
நடிகர்கள்: சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்தர்
அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் புதையலை தேடி போகும் சிலர் மர்மமான முறையில் இறந்து போகின்றனர். அந்த கிராமத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் சுரேஷ் ரவி, இந்த வழக்கை விசாரித்து வருகிறார். கிராமத்தினரின் எதிர்ப்பை மீறி தொல்லியல் துறையினர் அங்கு புதையலை தேடுகின்றனர்.
இறுதியில் புதையல் கிடைத்ததா.? மர்ம கொலைகளுக்கு யார் காரணம்.?? இதுவே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சுரேஷ் ரவி, ஒரு சில இடங்களில்மட்டுமே கதையோடு ஒத்துப் போகிறார். மற்ற இடங்களில் ஏனோ தானோவென்று தான் கதாபாத்திரத்தில் நிற்கிறார். வசனங்களில் அதிகமாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
கதையில் பெரிதான ஒரு ஈர்ப்பு இல்லாததால், படத்தின் மீதான சுவாரஸ்யம் வெகுவாக குறைந்து போய்விடுகிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே இந்த குற்றங்களையெல்லாம் யார் செய்கிறார்கள் என்று நமக்கு தெரிந்துவிடும் அளவிற்கு திரைக்கதை நகர்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் புராண கதைகள் சுவாரஸ்யமாக இருந்தது. அதையே படம் முழுக்க வைத்திருந்திருக்கலாம்.
இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். சிலை, புராணம், புதையல் இவற்றை மையப்படுத்தி வெளியான படங்களின் கதையே இதிலும் இருக்கிறது.
சிலையைக் கடத்திய நபர், சிலையை வீட்டிற்கு வெளியே வைத்திருந்தது சிரிப்பை தான் வர வைத்தது.
நந்திவர்மன் – பழமை




