
கடந்த ஆண்டு சன் தொலைக்காட்சியில் விஜய் சேதுபதி ஏற்று நடத்திய ’நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் நடிகர் திரு. கிரேசி மோகன் அவர் கூறிய ஒரு நகைச்சுவை துணைக்கை எடுத்து விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
இந்நிகழ்வு நடைபெற்று ஒரு வருடம் கடந்த போதும், விஜய் சேதுபதியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வண்ணம், அவர் மீது வீண் விஷமிகள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது தமிழகம் இருக்கும் இந்த இக்கட்டான சூழலில், ஏதோ பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டுமென்றே விஜய் சேதுபதியின் மீது கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்காக அகில இந்திய விஜய் சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் சைபர் கிரைம் ஆணையர் அவர்களிடத்தில் தலைமை சார்பில், வீண் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
மக்களுக்கும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் சினிமாவை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கும் பல உதவிகளை கண்மூடித்தனமாக செய்து வரும் நல்ல உள்ளம் கொண்ட விஜய் சேதுபதி மீது எந்தவித தவறும் இல்லை என மக்கள் கூறி வருகின்றனர்.
மக்களின் மனதில் நிற்பதாலேயே அவர் மக்கள் செல்வன் ஆனார் போலும்.
இதோ புகார் அளிக்கப்பட்டதற்கான நகல்,





