Spotlightசினிமா

அஜீத்துக்காக காத்திருக்கும் ஏ ஆர் முருகதாஸ்!

சர்கார் படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரஜினியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இயக்குனர் முருகதாஸ் அளித்த பேட்டியில், ‘நான் எங்கே போனாலும் அஜித்தின் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கேட்கும் ஒரே கேள்வி எங்கள் அஜித்துடன் சேர்ந்து எப்போது படம் பண்ணுவீங்க?. என்பதுதான்.

நிறைய இடங்களில் இதே கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய முதல் படம் தீனா. அஜித்துடன் நான் இணைந்த முதல் படம். அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் சேரவே இல்லை.

அஜித் இப்போது இருக்கும் உயரத்துக்கு தகுந்த ஒரு கதை பண்ண வேண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் சேர்ந்தால் அப்படி ஒரு வெயிட்டான கதையாக இருக்க வேண்டும்.

அதுக்கு ஏற்ற மாதிரி பக்காவான ஒரு கதையையும் தயார் செய்து வைத்திருக்கிறேன். அஜித் கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டால், அடுத்து உடனே படப்பிடிப்பை ஆரம்பித்துவிடலாம்.’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button