
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. மேலும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
தொடர்ந்து நடிகை வனிதா நேற்றைய முன் தினம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்து அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார்.
இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றி அனைவரிடமும் கூறிய வனிதா இனி முகெனை நம்பாதே என்று அபிராமியிடம் கொளுத்தி போட, முகேன் மற்றும் அபிராமி உறவில் விரிசல் ஏற்பட்டு பெரும் பிரச்சினையாக வெடித்தது.
இவ்வாறு இன்று மதுமிதா பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்களை அடிமையாக்கி யூஸ் பண்றீங்க என நடிகை மதுமிதா கிளப்ப இதனால் அவருக்கும், கவினுக்கும் இடையே இடையே பெரும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
மேலும் அப்பொழுது நடிகை மதுமிதா உன்னை மாதிரி நாலு பொண்ணுங்கள யூஸ் பண்ணிக்கிட்டு உள்ளே இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்று கூற மற்ற போட்டியாளர்கள் இவ்வாறு பேசுவது தவறு என கூறுகின்றனர்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த “தப்பு செஞ்சா மக்கள் வெளிய அனுப்புவாங்க. இது நான் சம்பந்தப்பட்ட விஷயம் இதை பற்றி கதைக்க வேண்டாம்” என்று கோபமாக கூறி விட்டு அங்கிருந்து செல்கிறார். அதன் வீடியோ இதோ!
#Day52 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FASVa6kbt9
— Vijay Television (@vijaytelevision) August 14, 2019




