Spotlightசினிமா

லக்ஷ்மன் ஸ்ருதி கச்சேரி ராமன் தற்கொலை; காரணம் என்ன?

உலக நாடுகள் பலவற்றிலும் லக்ஷ்மன் ஸ்ருதி இன்னிசை குழு கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த குழுவின் உரிமையாளர்களான ராமன் – லக்ஷ்மன் ஸ்ருதி இன்னிசை மழை என்ற பெயரில் 7000க்கும் அதிகமான இசை கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திருவையாறு என்ற பெயரில் கர்நாடக இசை கலைஞர்களை வைத்து கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராமன் நேற்று சென்னையில் நடக்கும் திருவையாறு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார்.

நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறி வீடு திரும்பினார்.

இரவு 9 மணியளவில் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த போது, ராமன், அவரது அறையில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

இவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், மாலதி, நித்யஸ்ரீ, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Lakshman Sruthi partner Raman commits suicide

Facebook Comments

Related Articles

Back to top button