
சீமராஜா, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் என தோல்வி படங்களை கொடுத்து வந்ததால் சிவகார்த்திகேயன் மார்கெட் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது.
இதன் பின்னர் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது.
இந்த படத்தை அனைவரும் பாராட்டி வந்த நிலையில் அவரின் அடுத்த ‘ஹீரோ’ படத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் என கூறப்பட்டது.
பொதுவாக சிவகார்த்திகேயன் படம் என்றால் கிராமத்திலும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஹீரோ படத்திற்கு சிட்டி அளவில் மட்டுமே எதிர்பார்ப்பு உருவானது.
இதற்கு முக்கிய காரணம் ஒரு சிலரிடம் மட்டுமே சிக்கிய புரோமோசன் தான் என கூறப்படுகிறது.
படத்தை விளம்பரம் செய்வதாக அந்த ஒரு சிலர் சொன்னாலும் ஒன்றும் சொல்லும்படியாக அமையவில்லை.
கிறிஸ்துமஸ் போன்ற விடுமுறை நாட்களில் படம் வெளியானால் அதுவே படத்திற்கு பிளஸ் பாண்ட்டாக அமையும். அப்படியிருந்தும் கதையும் இல்லை. விளம்பரமும் இல்லை என்பதால் படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை என தெரியவந்துள்ளது.
மீண்டு வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் ஹீரோவுக்கு முந்தைய இடத்திற்கு போய்விட்டார். இனியாவது சுதாரித்துக் கொள்வாரா? என்பதை பார்ப்போம்.





