Spotlightதமிழ்நாடு

பஸ்ஸின் கூரை மீது ஏறி மாணவர்கள் அராஜகம்… சிறைபிடித்த பயணிகள்!!

சென்னை மந்தவெளியில் இருந்து பிராட்வே வழித்தடத்தில் அரசு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள நியூ காலேஜ் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இருவர் அந்த பஸ்ஸில் பயணம் செய்தனர்.

பஸ் சென்று கொண்டிருக்கும் போது ஒருவர் பஸ்ஸின் மேற்கூரை மீதும் மற்றொருவர் பஸ்ஸின் பக்கவாட்டிலும் ஏறிக் கொண்டு மக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.

இதைக் கண்டு பொதுமக்கள் காவல்துறைக்கு போன் மூலமாக தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீஸார் பஸ்ஸை மறித்தனர்.

போலீஸைக் கண்டு தப்பிக்க பார்த்த அந்த மாணவர்களை, பொதுமக்கள் விரட்டிச் சென்று சிறைபிடித்தனர். பின் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

இரு மாணவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Facebook Comments

Related Articles

Back to top button