
கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடிக்க வெளிவந்துள்ள படம் ‘அன்பிற்கினியாள்’.
பத்திரிகையாளர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட இப்படம் நேற்று பல்வேறு திரையரஙகுகளில் வெளியானது.
முதல் காட்சி முதல் குடும்ப ரசிகர்கள் பட்டாளம் படையெடுத்தது. பலரும் இப்படத்தைபெரிதாக பாராட்டுகின்றனர்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுக்க அதிக வாய்ப்புள்ளது..
இரண்டாம் பாதியில் பதற வைக்கும் நடிப்பை கொடுத்த கீர்த்தி பாண்டியனை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.
பல நாட்களுக்குப் பிறகு குடும்பமாக பார்க்கக் கூடிய வகையில் இப்படம் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.
சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
Facebook Comments





