Spotlightதமிழ்நாடு

புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியாம்.. முதல்வர் வேட்பாளர் கிருஷ்ணசாமியாம்!

திமுக கூட்டணியில் இருந்து வந்த புதிய தமிழகம், அங்கிருந்து கூட்டணிக்கான அழைப்பு வராததால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதற்காக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

”அதிமுகவிடம் இருந்து கூட்டணிக்கான அழைப்பு வரவில்லை. அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக எத்தனை நாள் காத்திருப்பது?” என்று கூறினார்.

மேலும், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், 60 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button