Spotlightசினிமா

”இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள அலப்பறை”; நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அஸ்வின்!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் அஸ்வின்.

இவர் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அனைவரும் அஸ்வினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விதமாக புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தனர்.

மேலும், அஸ்வின் பேசும் போது இந்த படத்தின் கதையை கேட்பதற்கு முன் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகளை கேட்கும்போதே தூங்கியதாகவும் கூறினார்.

இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அஸ்வினை தொடர்ந்து கலாய்த்து மீம்ஸ் அடித்த வண்ணம் இருக்கின்றனர். ஒரு படம் கூட நடித்து வெளிவரவில்லை. அதற்குள் ஏன் இப்படி என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சூப்பர் ஸ்டார் என கூறியதையும் கலாய்த்து வருகின்றனர்.

 

Facebook Comments

Related Articles

Back to top button