
மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பரிட்சயமானவர் நடிகர் மைம் கோபி.
அதுமட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலமாகவும் மக்களிடத்தில் நல்லதொரு இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் மைம் கோபி.
இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்று பரிசை கையில் வாங்கும் போது, கிடைத்த பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடுவேன் என கூறினார்.
அதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது அண்ணா நகர் பகுதியில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன் வான் உலா என்ற பெயரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதல்முறையாக விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்றார்.
அங்கு தனியார் ரெசார்ட் ஒன்றில் குழந்தைகளை ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கவிட்டு பின் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார் நடிகர் மைம் கோபி.
இவரின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.




