
இந்தியாவில் ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபுடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில், ஜூலை 7-ம் தேதிக்குள் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை விரிவுபடுத்த வலியுறுத்தியுள்ளது. மேலும் சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15-ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments





