
ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் “வேட்டையன்”.
இத்திரைப்படம் வரும் வியாழன் அன்று திரைக்கு வர இருக்கிறது. ஜெய்பீம் படத்தின் மிகப்பெரும் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கத்தில் வெளிவரும் படம் இது என்பதால், இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது என்பதாலும் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பிரபல திரையரங்கான ரோகிணி திரையரங்கில் வேட்டையன் படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் திறக்கப்பட்டுள்ளது.
அதில் படத்திற்கான ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 437.20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டின் விலை அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக இருப்பதால், இணையத்தில் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2D படத்திற்கு 3D என்று குறிப்பிட்டு அதற்கென சுமார் 194 ரூபாய் வரை டிக்கெட் விலையோடு கூடுதல் விலையாக வைத்து டிக்கெட்டின் விற்று வருகின்றனர்.

வெட்ட வெளிச்சமாக இணையத்தில் இப்படி பகல் கொள்ளையில் பிரபல திரையரங்கே ஈடுபட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்படி பகல் கொள்ளையடிக்கும் திரையரங்கை ஆளும் திமுக அரசு எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களின் பணத்தை இப்படி கொள்ளையடிக்கும் திரையரங்கிற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும், இத்திரையரங்கின் உரிமையாளரான பன்னீர் செல்வத்தின் மகன் வினோஜ் P செல்வம் ஆளும் பாஜக அரசின் கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
ரோகிணி திரையரங்கில் ஒரு டிக்கெட்டில் விலை:
Ticket Base Price Rs. 150.09
CGST Rs. 14.95
SGST Rs. 14.95
TMC Rs. 12.01
ET Rs. 4
3D ChargesRs. 194.00
Convenience fees Rs. 47.20
Sub total Rs. 437.20




