Spotlightவிமர்சனங்கள்

சீசா – விமர்சனம் 2.5/5

குணா சுப்ரமணியம் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார், ஆதேஷ் பாலா, இவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் சீசா.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சரண்குமார். மேலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன்.

தயாரித்திருக்கிறார் டாக்டர் கே செந்தில் வேலன்.

கதைக்குள் பயணித்துவிடலாம்..

இளம் தொழிலதிபரான நிஷாந்த் ரூசோ, தனது கல்லூரி காதலியை மணமுடித்துக் கொள்கிறார். இருவரும் ஒரு பங்களாவில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இந்நிலையில், அந்த பங்களாவில் வேலையாள் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அதுமட்டுமல்லாமல், நிஷாந்த் ரூசோவையும் அவரது மனைவியான பாடினி குமாரையும் காணவில்லை.

இந்த வழக்கை கையில் எடுத்து தனது விசாரணையை துவங்குகிறார் நட்டி நட்ராஜ்.

கதைப்படி,

தொழிலதிபரான நிஷாந்த் ரூசோ தனது காதலியான பாடினி குமாரை திருமணம் செய்து கொள்கிறார். மிகப்பெரும் பங்களாவில் இருவரும் தங்கி வருகின்றனர்.

ஒருநாள் வீட்டில் வேலையாள் ஒருவர் கொலையுண்டு கிடக்க, நிஷாந்த் ரூசோ மற்றும் பாடினி குமார் இருவரையும் காணவில்லை.

இந்த வழக்கை இன்ஸ்பெக்டராக வரும் நட்டி விசாரிக்க ஆரம்பிக்கிறார். வழக்கானது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. இந்த சூழலில் மாயமான நிஷாந்த் ரூசோ மீண்டும் வீட்டிற்கு தனியாக வருகிறார். தனது மனைவியை எங்கே என கூச்சலிடுகிறார்.

அப்படியென்றால், பாடினி குமார் எங்கே என்று வேறு கோணத்தில் தனது விசாரணையை துவக்குகிறார் நட்டி

இறுதியில் பாடினி குமாரை கண்டுபிடித்தார்களா இல்லையா.? நிஷாந்த் ரூசோ என்ன செய்தார்.?? நட்டி இந்த வழக்கை எப்படி கையாண்டார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதில் தனித்துவமாக தெரிபவர் நடிகர் நட்டி நட்ராஜ். இந்த படத்திலும் தனது உடல்மொழியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக கம்பீரமான நடிப்பில் தெரிகிறார்.

கதையின் இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, நடிப்பிலும் நடனத்திலும் நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். சைக்கோவாக தோன்றும் இடத்தில் நடிப்பு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டதை ஏன் அவர் உணரவில்லை என்று தெரியவில்லை.

நிஷாந்த் ரூசோவின் மனைவியாக நடித்திருக்கும் பாடினி குமார், கதையில் முக்கியத்துவம் கொண்டு கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கேரக்டரை இயல்பாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

நிஷாந்தின் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தி, வீட்டில் வேலை செய்பவராக நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சரண்குமார் இசையில் சிவன் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் ஓகே ரகம் தான். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஆகியோரது கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒரு சைக்கோ பாணியில் கதை நகர்ந்து கொண்டிருக்கும் வேலையில், க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும் போது, இக்கதைக்கான முக்கிய நோக்கம் வெளிப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டால், இளைஞர்கள் என்னமாதிரியான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த சீசா.

இருந்தாலுன், திரைக்கதையில் இன்னும் சற்று அதிகமாகவே மெனக்கெட்டிருக்கலாமே என்று கூற வைத்துவிட்டார் இயக்குனர்.

சில குறைகள் எட்டிப் பார்த்தாலும் எடுத்த முயற்சிக்காக சீசா குழுவினரை வெகுவாக பாராட்டலாம்.

சீசா – விளையாட்டு விபரீதம்.

Facebook Comments

Related Articles

Back to top button