Spotlightசினிமா

‘கடைசி விவசாயி’மணிகண்டனை அவரது சொந்த ஊரிலேயே சென்று பாராட்டிய மிஷ்கின்!

ணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நல்லாண்டி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. நல்ல ஒரு வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இப்படம் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படத்தினை பார்த்த இயக்குனர் மிஷ்கின், “கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன்.

படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது.

மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும். ” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button