Spotlightசினிமா

‘அன்பில் அவன்’ நிச்சயம் நின்று பேசும் – அசோக் செல்வன் நம்பிக்கை! கோவிந்த் வசந்தா இசை குறித்து பெருமிதம்

நடிகர் அசோக் செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெண்களின் கனவை மையமாகக் கொண்ட காதல் கதை

இயக்குநர் ஆர். கார்த்திகேயன் கூறுகையில், ‘அன்பில் அவன்’ பெண்களின் கனவு, அதை நோக்கிய பயணம், போராட்டம் மற்றும் சவால்களை காதல் மற்றும் உணர்வுகளுடன் பேசும் திரைப்படம் என தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணையும் புதிய திரை ஜோடி படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்றும், ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அழகான விஷுவல்ஸ் மற்றும் திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் படம் நின்று பேசும்” – அசோக் செல்வன்

நிகழ்வில் பேசிய நடிகர் அசோக் செல்வன், ஒவ்வொரு திரைப்படமும் ஏதாவது ஒரு வகையில் புதிதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் படங்களைத் தேர்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

‘அன்பில் அவன்’ படத்தின் கதையில் புதிதாக எதுவும் இல்லையென்றாலும், அதன் திரைக்கதை மற்றும் கதை சொல்லும் விதம் ரசிகர்களுக்கு புதிய திரையரங்க அனுபவத்தை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், படத்தில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஏராளமான தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ் இருப்பதாகவும், குறிப்பாக பெண்கள் ரசிக்கக்கூடிய பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

அன்பில் அவன் – காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதுதான் இப்படத்தின் ஒன் லைன்.”

மேலும், “காதல் புத்திசாலியை முட்டாளாக்கும்; சாதாரணமானவனை சாதனையாளராக்கும்” என்ற கருத்தை பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அசோக் செல்வன் தெரிவித்தார்.

“கோவிந்த் வசந்தாவின் இசை பேசும்!” – அசோக் செல்வன்

படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா குறித்து பேசிய அசோக் செல்வன், இப்படத்தின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும் என குறிப்பிட்டார்.

மேலும், ‘96’ திரைப்படத்தின் இசையைப் போலவே ‘அன்பில் அவன்’ படத்தின் இசையும் பேசப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

“என் இதயத்திற்கு நெருக்கமான படம்” – ப்ரீத்தி முகுந்தன்

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், ‘அன்பில் அவன்’ தனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என்றும், இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கதாபாத்திரத்திற்காக தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், திருமணமாகாத பெண்கள் மட்டுமின்றி திருமணமான பெண்களும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

செப்டம்பரில் வெளியாகிறது?

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


🎬 படக்குழு

நடிப்பு: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர்

இயக்கம்: ஆர். கார்த்திகேயன்
கதை: விக்னேஷ் ராஜா
ஒளிப்பதிவு: கௌதம் ராஜேந்திரன்
இசை: கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பு: ஆர்.கே. செல்வா
கலை இயக்கம்: மணிகண்டன் ஸ்ரீனிவாசன்
தயாரிப்பு: கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம்
தயாரிப்பு நிறுவனங்கள்: ஐங்கரன் இன்டர்நேஷனல், ஹேப்பி ஹை பிக்சர்ஸ்

Facebook Comments

Related Articles

Back to top button