Spotlightசினிமா

ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்? அட்லீ தயாரிப்பில் பிரம்மாண்ட கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்க உள்ளதாகவும், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் அவர் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், சிலம்பரசன் படத்தை இயக்குவதற்கு முன்பாக ஜேசன் சஞ்சய் நடிக்கும் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி முடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தப் புதிய திரைப்படத்தைத் தொடங்க சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் சிலம்பரசன் தரப்பிலிருந்து தடையில்லாச் சான்று (NOC) பெற வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், ஜேசன் சஞ்சய் – கீர்த்தீஸ்வரன் – அட்லீ கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், ஜேசன் சஞ்சய்யின் கதாநாயகன் அறிமுகப் படமாக இது அமையும்.

Facebook Comments

Related Articles

Back to top button