
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், வாக்களிக்க வந்த நடிகர் விவேக் பேசும் போது, ‘நடிகர் சங்க தேர்தலை நல்லபடியாக ஒளிபரப்பு செய்த மீடியாக்களுக்கு நன்றி. கலையை போற்ற வேண்டியது நம்முடைய கடமை.
அதே சமயம், பொதுமக்கள் அவர்கள் அருகாமையில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பலரும் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும் அறிந்து அதை செய்தும் வருகின்றனர். அதையும் மக்கள் முன் எடுத்துச் செல்ல வேண்டியது மீடியாக்களின் கடமையாக இருக்கிறது.
நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் அளித்தது போல், நீர் சேமிப்பு, மரம் நடுதலின் முக்கியத்துவத்தையும் மீடியாக்கள் தான் மக்கள் முன் எடுத்துச் செல்ல வேண்டும்.’ என்று கூறினார்.
Facebook Comments





