
ஒரு சில படங்களில் நடித்தாலும் தனது கண்களால் இளம் ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகை சாந்தினி.
சித்து +2 வில் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இப்படத்தினைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சாந்தினி. இந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து மென்மையான உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
மேற்கூறிய படங்கள் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக நிச்சயம் இருக்கும் என்கிறார் சாந்தினி.





