
பூலோகம் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் அகிலன். முதல் முறையாக முழுக்க முழுக்க கடல் போக்குவரத்துக் கூடமான ஹார்பரில் படமாக்கப்பட்டிருக்கிறது.
கதைப்படி,
ஹார்பரில் பணிபுரியும் ஜெயம் ரவி, தனக்கு மேல் இருக்கும் கடத்தல் மன்னனான ஹரீஷ் பெராடியிடம் பணிபுரிகிறார். ஹரீஷ் பெராடிக்கு மேல் இந்திய பெருங்கடலின் பெரும் கடத்தல் மன்னனாக வருகிறார் கபூர்.
கபூரிடம் நேரடியாக பணிக்கு சேர்ந்து தனது கடத்தல் திறமையை நிரூபிக்கிறார் ஜெயம் ரவி. கடத்தலுக்கு உறுதுணையாக தனது காதலி ப்ரியா பவானி சங்கரை காவல்துறையில் பணிக்கு சேர்த்து விடுகிறார்.
ஜெயம் ரவியை கையும் களவுமாக பிடிக்க டெல்லியில் இருந்து தனி போலீஸ் அதிகாரியாக வருகிறார் சிரக் ஜானி.
இவர்களை கடந்து ஹார்பரை தன் வசப்படுத்தி என்ன சாதித்தார் என்பதே படத்தின் கதை.?
எதற்காக இத்தனையும் செய்கிறார்.?? ஹீரோவாக ஜெயம் ரவி என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கமான மிடுக்கான போலீஸ் அதிகாரி, சாக்லேட் பாயாக இல்லாமல் கடத்தல் மன்னனாக தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற லுக்கில் பயங்கரமாக ஜொலித்திருக்கிறார் ஜெயம் ரவி. நடிப்பிலும் டாப் கியர் போட்டு மிரட்டி இருக்கிறார். வழக்கமான ஆக்ஷன் காட்சி இப்படத்தில் சற்று மாறுபட்டிருக்கிறது.
நாயகியாக வரும் ப்ரியா பவானி சங்கருக்கு பெரிதான ஸ்கோப் இல்லை என்றாலும்,வரும் காட்சியில் கவர்கிறார்.
ப்ளாஷ் பேக் காட்சிகள் இன்னும் சற்று பலமாக இருந்திருக்கலாம். போலீஸ் அதிகாரியாக வந்த சிரக் ஜானி நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
திரைக்கதை, கதைக்களம், வசனம் என அனைத்தும் பலமாக இருந்தும் கதையின் ஓட்டத்திலும், கதையிலும் இன்னும் சற்று கவனமாக இருந்திருக்கலாம் இயக்குனர் சாரே..
பின்னணி இசையில் வழக்கம் போல் தனது தனித்திறமையை காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர். ஹார்பரின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்த ஒளிப்பதிவாளரின் செயல்கள் பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் அகிலன் – அசுரனாக சுழன்று அடித்திருக்க வேண்டிய ஒன்று.. பட்.?