
குட்டி, குணா, ஜானி மூவரும் நண்பர்கள். செல்போன்களை திருடி விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஊர் சுற்றி ஜாலியாக இருப்பவர்கள் இவர்கள்.
திடீரென ஒருநாள், குணாவின் கையில் எம் எல் ஏ மாரிமுத்து மகனின் ஐ-போன் ஒன்று சிக்கிவிட, அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சனை.
எம் எல் ஏ- மகன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். குணாவை, இன்ஸ்பெக்டர் ராபர்ட் கொலை செய்து விடுகிறார். இன்ஸ்பெக்டர் தொடர்ந்து அந்த ஐ-போனை தேடும் முயற்சியில் இறங்குகிறார்.
தனது மகனை கொலை செய்தவனை தேடும் முயற்சியில் இறங்குகிறார் எம் எல் ஏ மாரிமுத்து.
இறுதியாக நடந்தது என்ன..?? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக அன்பு மயில்சாமி, நடிக்க முயற்சி செய்திருக்கிறார். செண்ட்றாயன், யாசர் இருவரும் கைகொடுத்திருக்கிறார்கள்.
ஏனைய கதாபாத்திரங்கள் மாரிமுத்து, ஏ வெங்கடேஷ், இருவரும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகியாக மனிஷாஜித் பாஸ் மார்க் வாங்கி அடுத்த கட்டத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் ராபர்ட் மாஸ்டர், நடிப்பில் வேறு ஒரு தளத்தை காட்டியுள்ளார். இரண்டாம் பாதியில் இவருக்கு அதிகப்படியான இடம் கொடுக்கப்பட்டதால், அதிகப்படியான ஸ்கோர் செய்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள், கதைக்கு பலம்… இயக்குனர் உசேனுக்கு வாழ்த்துகள்.
ஸ்ரீகாந்த் இசையில், மிரட்டலான இரண்டு பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னனி இசை கதையோடு பயணம்.
அல்டி – ட்விஸ்ட் காட்சிகள்அல்டிமேட் தான்….





