Spotlightவிமர்சனங்கள்

பனாரஸ் – விமர்சனம் 3.25/5

ஜையீத் கான் மற்றும் சோனல் மோண்டோரியோ ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் பனாரஸ்.

பான் இந்தியா படமாக பல மொழிகளில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் “பனாரஸ்”. காதலின் சுவாரஸ்யம் எப்படி இருந்தது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் நாயகன் ஜையீத் கான். அம்மா இல்லாததால் தந்தையின் அதீத பாசத்தில் வளர்கிறார் ஜையீத். தன் நண்பர்களிடம் கொடுத்த சவாலுக்காக நாயகி சோனலை காதலிப்பது போல் நடித்து அவரின் படுக்கையறை வரை சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அப்புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி விடுகிறது. மிகவும் கவலையுற்று தனது படிப்பை விட்டு நாயகி சோனல், தனது சித்தப்பா இருக்கும் பனாரஸுக்கு சென்று விடுகிறார். ((தாய் தந்தையை சிறு வயதிலேயே இழந்தும் விடுகிறார் சோனல்.))

புகைப்படம் இணையத்தில் வைரலானதால், மனம் நொந்து போன ஹீரோ நாயகியிடம் மன்னிப்பு கேட்க பனாரஸ் செல்கிறார்.

நாயகனின் மன்னிப்பை நாயகி ஏற்றுக் கொண்டாரா.? இவர்களுக்குள் காதல் உருவானதா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஜையீத் கானுக்கு இப்படம் முதல் படம் என்றாலும், முதல் படம் என்பது போல் இல்லாமல் ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், எமோஷ்னல் காட்சிகளிலும் மிளிர்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார் ஜையீத். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்க் எட்டிப் பார்த்தாலும், அதை கடந்து படத்தை ரசிக்கும் படியான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஜையீத் கான்.

அழகு தேவதையாக காட்சியளித்த படம் பார்ப்பவர்களை கண் இமைக்காமல் பார்த்துக் கொள்கிறார் நாயகி சோனல். படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் காட்சி வரையிலும் நடிப்பிலும் அழகிலும் மிளிர்கிறார்.

ஏனைய கதாபாத்திரங்களான, சாம்பு மற்றும் நாராயண் சாஸ்திரி கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாகவும் எமோஷ்னலாகவும் கவனம் ஈர்த்தனர்.

அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகமாக இருந்தாலும் பின்னணி இசையை கதையோடு பயணமாக கொடுத்து நம்மை கவர்ந்திழுத்திருக்கிறார்.

படத்திற்கு பெரும் பலமே ஒளிப்பதிவு தான். அத்வைதாவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக கொடுத்து நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார்.

படத்தின் முதல் பாதி கதைக்குள் செல்ல சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும், ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுத்துக் கொண்டே சென்றது. ஆனால், இரண்டாம் பாதியில் விஷால் நடித்த சமர், சிம்பு நடித்த மாநாடு உள்ளிட்ட படங்கள் கதைக்குள் எட்டி எட்டிப் பார்த்து சென்றாலும் க்தையின் வேகம் நம்மை ஈர்த்தது.

இருந்தாலும், பனாரஸின் அழகை காணவும் திரைக்கதையின் நகர்விற்காகவும் ஒரு முறை இப்படத்திற்கு குடும்பத்தோடே பயணப்படலாம்.

பனாரஸ் – அழகு 

Facebook Comments

Related Articles

Back to top button