Spotlightசினிமா

பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற பாடலை ரீ கம்போஸ் செய்த எ ஜே ஜான்சன்!

முதல் முறையாக பிரேசில் நாட்டின் புகழ் பெற்ற “எச்பின்ஹா டே பல்கலஹூ” என்ற பாடலை அந்த நாடு சிம்பொனிஇசை கலைஞர் “டவ்யிட வெலொசோ” உடன் இணைந்து அந்த பாடலை அந்த நாட்டின் பாரம்பரிய இசை வடிவம் போலவே ரிகாம்போஸ் செய்து வெளியிட உள்ளார் எஜே ஜான்சன்.

காதல் பஞ்சாயத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுடன் இணைந்து என்னுயிர் இந்தியா என்ற இசை ஆல்பத்தை உருவாக்கிய எஜே ஜான்சன் பல பாடல்களை தனது இசை ஆல்பம் முலமாக நமக்கு தந்துள்ளார்.

இவர் இசையமைத்த வா தமிழா என்ற பாடல் திரு பாரதிராஜா அவர்கள் வெளியீட்டு உள்ளார் மற்றும் என் உயிர் இந்தியா பாடலை தற்போது உள்ள தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்டு உள்ளார்.

அவருடைய புதிய முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த பாடல் எ ஜே ஸ்டுடியோஸ் என்னும் யூடூபில் வெளியிடப்பட்டு உள்ளது.

▶️ https: .//.youtu.be/xSNikHRKBGs

Facebook Comments

Related Articles

Back to top button