
ராகுல் கபாலியின் இயக்கத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரீஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “பயமறியா பிரம்மை”.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் நந்தா மற்றும் பிரவீன். இசையமைப்பாளராக கே பணியாற்றியிருக்கிறார். தயாரித்திருக்கிறது 69 எம் எம் பிலிம்ஸ்.
பல கொலைகளை செய்த குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் ஜெகதீஷ். இவர் எப்படி இவ்வளவு கொலைகளை செய்தார் என்றறிந்து அவற்றை புத்தகமாக வெளியிட எண்ணுகிறார் வினோத் சாகர்.
அதற்காக ஜெகதீஷை சிறைச்சாலையில் சந்திக்கிறார் வினோத் சாகர். தான் செய்த கொலைகளை கலையாக நினைத்து செய்ததாக கூறுகிறார் ஜெகதீஷ்.
ஜெகதீஷுக்கு இவ்வளவு கொலை செய்யும் மனப்பான்மை எப்படி வந்தது.? ஜெகதீஷின் வாழ்க்கையை வினோத் சாகர் எப்படி புரிந்து கொள்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
பலருக்கும் புரியாத வகையில் திரைக்கதை நகர்ந்து செல்வதால், நம்மால் எளிதில் இக்கதைக்குள் பயணிக்க முடியவில்லை. எடுத்த முயற்சி பாராட்டும்படியாக இருந்தாலும், அதை எளிதாக புரிந்து கொள்ளும்படி கொடுத்திருந்திருக்கலாம். ஒளிப்பதிவு இன்னும் பெரிதாகவே கைகொடுத்திருந்திருக்கலாம்.
கே’வின் பின்னணி இசை பெரிதாக கைகொடுத்திருக்கிறது. நடித்த நடிகர்கள் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து தங்களது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.





