சினிமா

பிக் பாஸ் வீட்டில் செக்ஸ் இல்லை என்று கூறினார்கள்.. ஆனால்,… நடிகை வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

வெளிநாட்டு டிவிக்களில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய டிவிக்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் வரும் 21ந்தேதி துவங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். இந்நிலையில் மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தனர். அப்போது பிக் பாஸ் வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஸ்வேதா புகார் தெரிவித்தார்.

ஸ்வேதாவின் புகார் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பிக் பாஸ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை காயத்திரி குப்தா. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- ’நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பே என்னிடம் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தை அவர்கள் திரும்ப பெற்றுள்ளனர். ஒப்பந்தம் போடப்பட்டதால், நான் வேறு எந்த புதிய வாய்ப்புகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்.

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் இல்லாமல் வாழ முடியுமா என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கேட்டனர். இது என்ன மாதிரியான கேள்வி என நான் அவர்களிடம் கேட்டேன். டிஆர்பிக்கு உத்தரவாதம் தரவில்லை எனில் உங்களை நாங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் நடத்தும் நிர்வாகிகள் கேட்டனர். அப்படி என்றால் ஏன் இரண்டரை மாதத்துக்கு முன்பு அவர்கள் என்னுடன் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். எனக்கான சம்பளத்தை கூட அவர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சில நாடகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் சக போட்டியாளர்களில் யாருடனாவது ஏற்கனவே கருத்து வேறுபாடு அல்லது பிரச்சினை இருக்கிறதா என்றும் என்னிடம் அவர்கள் கேட்டனர். அவர்களை பொறுத்த வரை நான் யாருடனாவது பிரச்சினை செய்யவில்லை என்றால் டிஆர்பி கிடைக்காது. பிக் பாஸ் ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் முற்றிலுமாக நியாயத்துக்கு புறம்பானது. நிகழ்ச்சிக்கு எதிராக பேசக்கூடாது என ஒப்பந்தம் போடுகின்றனர். இது அடிமைத்தனத்தை தவிர வேறு என்ன?. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நாம் பேச வேண்டாமா? எனவே தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு நஷ்டஈடு வேண்டும். பிக் பாஸால் நான் நிறைய இழந்துவிட்டேன்’. இவ்வாறு காயத்திரி கூறியுள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close