Spotlightசினிமா

மூத்த பத்திரிகையாளர்களை கெளரவப்படுத்திய Black Sheep நிறுவனம்!!

மிழ்சினிமாவை ஆக்கப்பூர்வ சினிமாவாக மாற்றிய பெருமை மறைந்த திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களை சாரும். எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் விநியோகஸ்தரராகவும் இவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய தொண்டு குறைவானதல்ல.

இவரின் 80ஆம் ஆண்டு விழாவினை விமர்சையாக கொண்டாட பா ஆர்ட் ப்ரொடக்‌ஷனுடன் ப்ளாக் ஷிப் இணைந்து இந்த விழாவிற்கான அறிவிப்பை நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.

பிரம்மாண்ட விழாவிற்கான லோகோவும் நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் தமிழ் சினிமாவின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றி வரும் மூத்த பத்திரிகையாளர்கள் நால்வருக்கு அவர்களை கெளவரவிக்கும் விதமாக மரியாதை செய்யப்பட்டது.

1) கலைப்பூங்கா ராவணன்

2) தேவி மணி

3) ஜெயச்சந்திரன்

4) தினகரன் தேவராஜ்

 

உள்ளிட்ட நால்வருக்கும் விருதும் வெள்ளிக் காசும் வழங்கி கெளவரவிக்கப்பட்டது. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை தன் எழுத்துகளால் தூணாக இருந்து வழி நடத்திச் சென்ற மூத்தோர்கள் நால்வருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

விழாவில், நால்வரும் தமிழ் சினிமாவில் தங்களுடைய இனிப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

இவ்விழாவில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜா, கங்கை அமரன், கலைப்புலி எஸ் தாணு, ஆர் கே செல்வமணி, பூச்சி முருகன், அம்மா T சிவா, சித்ரா லக்‌ஷமணன், தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகஸ்தரர்கள் கலந்து கொண்டனர். விழாவினை ப்ளாக் ஷிப் விக்னேஷ் மற்றும் அரவிந்த் இருவரும் தொகுத்து வழங்கினர்.

Facebook Comments

Related Articles

Back to top button