நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த்
சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அதன்பிறகு எந்த அப்டேட் இல்லாத நிலையில்ம் சற்று முன் அவரது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்,
”நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த
‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்.”
இப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், கேப்டன் விஜயகாந்த் முழு உடல்நலம் பெற்று மீண்டும் பழைய கேப்டனாக வருவார் என்று ரசிகர்களும் தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
Facebook Comments