Spotlightசினிமா

ஜெயிலில் இருந்து தப்பித்த ஜி வி பிரகாஷ்!

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார் நடிக்க உருவாகி வருகிறது ‘ஜெயில்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி நடிக்கிறார்.

முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதாக நடிகர் ஜி வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button