Spotlightஇந்தியா

உச்சகட்டத்தை எட்டும் விவசாயிகள் போராட்டம்..!!

த்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர்.

நேற்றைய தினம் டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை முற்றுகைக்கு உள்ளானது. ஹரியானாவிலிருந்தும், உத்தரப் பிரதேசத்திலிருந்தும் டெல்லியை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் போராடும் விவசாயிகளால் நிரம்பி வழிந்தன.

விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல முடியாதவாறு துணை ராணுவப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெடுஞ்சாலை முற்றுகையிடப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனையொட்டி ஞாயிறன்று நெடுஞ்சாலை முற்றுகைக்கு உள்ளானது.

போராடும் விவசாயிகளின் தலைவர்கள் சனிக்கிழமையன்று, அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, பின்னர் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால், அரசாங்கத்துடன் போராடும் விவசாயிகளின் சங்கங்களின் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று கூறியிருந்தனர்.

மேலும் இன்று முதல் நாடு தழுவிய அளவில் பட்டினிப் போராட்டம் மேற்கொள்வதாகவும் அறிவித்தனர். அதன்படி காலை 9 மணி முதலே டெல்லியில் போராடும் விவசாய சங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதேவேளையில் இன்று மத்திய அரசு மற்றும் பா.ஜ.க அலுவலகங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுட முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில், டெல்லி எல்லைகளில் 100 கம்பனி மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே போராட்டக்களத்தை நோக்கி அணி அணியாக, இந்திய ராணுவ படைகள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்திய ராணுவ அதனை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button