
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம்தான் ‘என் ஜி கே’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சூர்யா தற்போது கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், என் ஜி கே’வில் இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதால் சூர்யா நடித்து கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் செல்வராகவன் கேட்டுள்ளாராம்.
இதனால் தயாரிப்பாளர் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். ஏற்கனவே படம் ரிலீஸ் ஆகும் தேதியை முடிவு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர், மேலும் , 40 நாட்கள் ஷூட் என இயக்குனர் மிண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறாரே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
Facebook Comments





