
நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான சாருஹாசன் தனது 87வது வயதில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘தாதா 87’. இப்படம், பத்திரிகைகளாலும், பொதுமக்களாலும் பெரிதாக பாராட்டப்பட்டது.
தனது 87’வது வயதிலும், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகர் சாருஹாசன். இப்படத்தின் மூலம், தற்போது தமிழக அரசால் சாருஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தனது இயக்கத்திறனால் 87வயதுடைய ஒருவரை நடிக்க வைத்து சாருஹாசன் அவர்களின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற வைத்த பெருமை ‘தாதா 87’ படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி அவர்களையே சாரும்.
இன்று நடைபெற்ற சென்னை இண்டர்நேஷ்னல் பிலிம் பெஸ்டிவல் விழாவில், சாருஹாசன் அவர்களுக்கு தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் சாருஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கெளரவித்தார்.
உடன் இயக்குனர் பாக்யராஜ், பார்த்திபன், மனோபாலா மற்றும் தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி அவர்களும் இருந்தனர்.





