
இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, சிநேகா, யோகிபாபு, ப்ரனிதி, கைலாஷ், வேதாந்த் மற்றும் பூவையார் இவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஷாட் பூட் த்ரி. இப்படத்தில் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
கதைப்படி…
கைலாஷ், ப்ரனிதி, வேதாந்த் மூவரும் நண்பர்கள். இவர்கள் வசதிபடைத்தவர்கள். இவர்களுடன் பூவையாரும் நண்பன் தான். இவன் படிப்பதற்கு வழி இல்லாத ஏழை என்பதால் பள்ளிக்கு செல்லாமல், இவர்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில் வேலை பார்த்து வருகிறான்..
கைலாஷின் பெற்றோர்களாக வருகிறார்கள் வெங்கட் பிரபு – சிநேகா. இருவரும் மென் பொருள் இன்ஞ்சினியர்கள் என்பதால் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர். மகனை கவனித்துக் கொள்ளாமல்..
தனிமையை உணரும் கைலாஷிற்கு அவனது நண்பர்கள் ஒரு நாய்குட்டி ஒன்றை பரிசாக வழங்குகின்றனர்.. முதலில் அதனை வீட்டில் சேர்க்க மறுக்கும் சிநேகா, பின் கைலாஷிற்காக ஓகே சொல்கிறார் சிநேகா.
ஒருவருடம் உருண்டோட, குட்டியாக இருந்த நாய் பெரிதாக வளர்ந்து விடுகிறது. ஒருநாள் அந்த நாய், அபார்ட்மெண்டை விட்டு வெளியே ஓடி விடுகிறது. நாய் தொலைந்து போனதால் நண்பர்கள் நால்வரும் இணைந்து நாயை தேடும் படலத்தில் இறங்குகின்றனர்.
கடைசியாக நாயை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த சிறுவர்கள் நால்வரும் கதாபாத்திரமாகவே மாறி தங்கள் கேரக்டரை சூப்பராக செய்திருக்கிறார்கள்.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதை அளவாக செய்திருக்கிறார் யோகிபாபு. யோகிபாபு அடிக்கும் லூட்டிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.
தமிழ் சினிமாவில் நாய்களை வெளிவந்த பல படங்களில், இந்த படமும் வரிசையில் நிற்கிறது. எந்த வித ட்விஸ்ட் காட்சிகளும் இல்லாமல், ஒரே நேர்கோட்டில் கதையை பயணப்பட வைத்திருக்கிறார் இயக்குனர்.
குழந்தைகள் கவரும் ஆனால் பெரிதாக கவருமா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்.
நாய்கள் மீதான காதலை இப்படத்தில் அதிகமாக காண்பித்தாலும், அதன் மீதான ஏக்கத்தை இன்னும் அழுத்தமாகவே காட்சிப்படுத்தியிருக்கலாம்.
நாய் மற்றும் கைலாஷின் பிரிவு பெரிதாக தெரியவில்லை. இசை இன்னும் சற்று அழுத்தமாகவும் ஃபீலிங்ஸாகவும் கொடுத்திருந்திருக்கலாம்.. ஒளிப்பதிவு ஓகே ரகம் தான்.
ஷாட் பூட் த்ரி – ஈர்ப்பில்லை…





