சினிமா

இளையராஜாவுக்கு 50 கிலோ கேக் சிலை.; ஏன் தெரியுமா.?

இராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி கடையில் வருடந்தோறும் கிறிஸ்மஸ் & புத்தாண்டின் போது பிரபலங்களின் உருவச்சிலையை கேக்கில் வடிவமைத்து வாடிக்கையாளர்களை கவருவது வழக்கம்.

தற்போது கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் இந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் உருவச்சிலையை ஐந்தரை அடி கேக்கில் உருவாக்கியுள்ளனர்.

அதில் வெள்ளை வேஷ்டி-ஜிப்பா என இளையராஜாவின் வழக்கமான கெட் அப்பில் உள்ளார்.

இந்த கேக் 50 கிலோ உள்ளது. 250 முட்டைகளை கலந்து ஐந்து பேர் இணைந்து 6 நாட்களில் இந்த சிலையை உருவாக்கி இருக்கிறார்களாம்.

அதை ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.

இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தை இந்த சிலையை அவர்கள் வடிவமைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

Isaignani fans made cake statue for Ilayaraja in 50kg

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close